இந்தியாவில் இருந்து வந்த இரண்டாயிரம் ஆசிரியர்கள் மலையக பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்தெரிவித்தார்.
விமல் வீரவன்சவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கருத்துரைத்த போதே வேலுகுமார் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கருத்து முற்றிலும் பொய்யாகும். அவ்வாறு இந்தியாவில் இருந்து
ஆசிரியர்களுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவும் இல்லை, இரண்டாயிரம்
இந்திய ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்படவும் இல்லை.அது முற்றிலும் பொய்யான தகவலே என்று பொறுப்புடன்
கூறுகின்றேன் என்றார்.