‘சேனல் 4’ ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

 


‘ஈஸ்டர் ஞாயிறு’ தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் ‘சேனல் 4’ ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, ‘சேனல் 4’ அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற அரச சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிவில் சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழுவை நியமிக்க பாதுகாப்புச் சபைக் கூட்டம் தீர்மானித்துள்ளது. குழுவின் பிரதிநிதிகள் நியமனம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ‘சேனல் 4’ அம்பலப்படுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவிற்கு அந்தப் பணியை வழங்கியுள்ளார்.

இந்த குழு அல்லது தெரிவுக்குழுவிடம் எந்தவொரு நபரும் தமது ஆதாரங்கள் மற்றும் தகவல்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.