மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இருந்து 2022ம் ஆண்டிற்கான உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் , விருது வழங்கும் நிகழ்வும்.

 







































மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்  கல்லூரியில்  இருந்து 2022ம் ஆண்டிற்கான உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த  மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் , விருது வழங்கும் நிகழ்வும்  நடராஜானந்த   மண்டபத்தில் வெகு விமர்சையாக   இன்று இடம்பெற்றது.

விஞ்ஞான பிரிவில் 54 வீத மாணவிகளும் கணித பிரிவில் 70 வீத மாணவிகளும், வர்த்தக பிரிவில் 88 வீத மாணவிகளும், கலை துறையில் 76 வீத மாணவிகளும்,  2022ம்  ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த காலங்களுடன் ஒப்புடுகையில் இவ்வருட சித்தி வீதம் அதிகரித்து காணப்படுவதாக கல்லூரி அதிபர் தெரிவித்தார் .
சாதனை மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரி முதல்வர் திருமதி என்.தர்மசீலன் தலைமையில்  வெகு சிறப்பாக இன்று இடம்பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவிகள், ஆசிரியர்கள்,  எனப் பலரும் நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர் .