“HELP EVER” அமைப்பினரால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

0
307

மட்டக்களப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் HELP EVER தன்னார்வ அமைப்பினரால் இன்றைய தினம் (2021.06.27) ,கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சந்திவெளி ,முறக்கட்டான்சேனை,கோரைகல்லிமடு, பாலையடி தோணார் ஆகிய இடங்களில், பயணக்கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரங்களை இழந்து வாழும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கிரான் பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜ்பாபு அவர்களின் தலைமையின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் வவுன தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சில்லிக்கொடியாறு ,மற்றும் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள அரசடித்தீவு போன்ற இடங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சில குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் அறுபது குடும்பங்களுக்கு மேல் உலர் உணவு பொதிகள் வினியோகிக்கப்பட்டன.
களுதாவளையை பிறப்பிடமாகவும் ,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சமூக ஆர்வலர் திரு சாமித்தம்பி ஜீவானந்த ராஜா அவர்களின் பூரண அனுசரணையுடன் இவ் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here