0
4

நேற்றைய தினத்தில் (21) மாத்திரம் 1,566 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,539 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 263,758 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், 3,917 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here