வரதன்
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல் இருப்புக்காக மாவட்டத்தில் கொண்டு வந்து இடையின நடுவே கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை எமது அரசாங்க காலத்தில் நாம் தற்போது வழங்கி வைத்துக் கொண்டிருக்கின்றோம் எமது அரசாங்கத்துக்கு எதிரான தொடர்ச்சியான சில பிழையான கருத்துக்களை எதிர்க்கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
கடந்த காலங்களில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறிய அவர்களே இன்று அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதையும் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதையும் காணக் கூடியதாக உள்ளது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க எமது அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களுக்கான நீதிக்கும் நேர்மைக்குமான அரசாங்கமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என
நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்தார்





