மட்டக்களப்பு கல்லடி - உப்போடை , நொச்சிமுனை அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்-2026

 






 
 
 
 

 
 

 


மட்டக்களப்பு, கல்லடி உப்போடை மற்றும் நொச்சிமுனை கிராமங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி சனிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

ஆலயத்தின் மஹோற்சவ கிரியைகள் 12.06.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் பூர்வாங்கக் கிரியைகளுடன் தொடங்கும். முக்கிய திருவிழா நாட்கள் வருமாறு:

  • 13.06.2026 (சனிக்கிழமை): நண்பகல் 12.00 மணிக்கு கார்த்திகை நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய சுபவேளையில்திருக்கொடியேற்றம் நடைபெறும்.

    . 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை உபயம்:  ஆலயகுரு சிவஸ்ரீ சண்முக வீசந்தநாத குருக்கள்
    15.06.2026 திங்கட்கிழமை
    உபயம்: மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி

    16.06.2026 செவ்வாய்க்கிழமை உபயம்: மட் / சிவானந்த வித்தியாலயம் தேசிய பாடசாலை

  • 17.06.2026 (புதன்கிழமை): மாம்பழத் திருவிழா (.2-ஆம் குறிச்சிப் பொதுமக்கள்)

  • 18.06.2026 (வியாழக்கிழமை): திருவிளக்குப்பூசை. (3-ஆம் குறிச்சிப் பொதுமக்கள்)

  • 19.06.2026 (வெள்ளிக்கிழமை): வசந்த உற்சவம். ( 4-ஆம் குறிச்சிப் பொதுமக்கள்)

  • 20.06.2026 (சனிக்கிழமை): திருவேட்டைத் திருவிழா.  (5-ஆம் குறிச்சிப் பொதுமக்கள்)

  • 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை): காலை 7.30 மணிக்கு தேரோட்டம் (1-ஆம் குறிச்சிப் பொதுமக்கள்)  நடைபெறும்.

  • 22.06.2026 (திங்கட்கிழமை): அதிகாலை தீ மிதிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவுபெறும்.

  • 24.06.2026 (புதன்கிழமை): மாலை 5.00 மணிக்கு வைரவர் பூசை நடைபெறும்.

மஹோற்சவ காலங்களில் தினமும் முற்பகல் 10.00 மணிக்கு மூலவர் அபிஷேகமும், மாலை 6.00 மணிக்கு யாக பூசையுடன் ஆரம்பமாகி இரவுத் திருவிழாக்களும் நடைபெறும். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த க.சாந்தரூபன் குழுவினரின் மங்களவாத்தியதுடன்  நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


இந்த மஹோற்சவக் கிரியைகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவாகம கிரியா சிரோண்மணி சிவஸ்ரீ சண்முக வசந்தநாத குருக்கள் தலைமையில், சாதக ஆசிரியர் சிவஸ்ரீ சேந்தன் சர்மா மற்றும் ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ அஜந்தன் சர்மா ஆகியோர் முன்னின்று நடத்துவர்.

வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் இந்த வருடாந்த மஹோற்சவத்தில் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு, எம்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.