அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரத்திற்கு (111), 237 பணியாளர்களை கொண்ட இரண்டாவது தொகுதி ஆட்சேர்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 


சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல்களின் பேரில், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரத்திற்கு (111), 237 பணியாளர்களை கொண்ட இரண்டாவது தொகுதி ஆட்சேர்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் உள்ள பணி வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நேர்காணல்கள் 2026 ஜூன் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்புகள் 31.08.2025 அன்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கண்ட தேர்வில் 141 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அதன்படி, தகுதிபெற்றபெற்று விண்ணப்பதாரர்களுக்குப் பதிவுத் தபால் மூலம் நேர்முகத்திற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான மேலதிகத் தகவல்களை உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் இலவச சுகாதார சேவையின் மனிதவளம், தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், கடந்த ஜனவரி மாதம் அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 213 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் இரண்டாவது கட்டமாகும்.

நேர்காணல்கள் முடிந்தவுடன் உடனடியாக நியமனக் கடிதங்களை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.