அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய
திருக்கோவில்
வலய மட்ட போட்டிகள் நேற்று (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார
பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில் மத்திய கல்லூரியில் நடைபெற்றன.
முன்னதாக,
திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் , சேர
சோழ பாண்டியர் ,திருவள்ளுவர், ஔவையார், தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தாய்
உள்ளிட்ட பல பண்பாட்டு கலை அம்சங்களுடன் கூடிய பாரம்பரிய நிகழ்ச்சிகள்
அடங்கிய பேரணி தம்பிலுவில் மத்திய கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது. பல
பாடசாலைகள் அதற்கு தமது நிகழ்ச்சிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது.
அங்குரார்ப்பண நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரியில்
திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் . உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது.
போட்டிகளில், ஆலையடிவேம்பு , திருக்கோவில், பொத்துவில் ஆகிய 03 கோட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
(வி.ரி.சகாதேவராஜா)




















