விபத்துகளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0
7

நாட்டில் வாகன விபத்துக்களால் நேற்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும் இருவர் பாதசாரிகள் என்றும், மற்றைய நபர் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் என்று அவர் கூறினார்.

அத்துடன், வாகன விபத்துக்களில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்காக போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here