படகுகள் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வு, மூவர் கைது.

0
7

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலங்கேணி, ஈச்சந்தீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட 13 படகுகள், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சட்டவிரோதமாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்ட இடத்தைப்   பொலிஸார் முற்றுகையிட்ட போது, அங்கிருந்த பலர் பதறியடித்து சிதறியோடித் தலைமறைவாகியுள்ளனர்.

இதன்போது, மூவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், ஏனையவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here